பி.இ-விண்ணப்பிக்க 55% மதிப்பெண்கள் அவசியம்
சென்னை: பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் நிருபர்களிடம் கூறுகையில்,
பி.இ, பி.டெக்கில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலும், தொழிற்பிரிவு மாணவர்கள் தங்கள் தொழிற்பிரிவு படிப்பு தொடர்பான பாடம், எழுத்து மற்றும் செய்முறை பாடங்களிலும் குறைந்தபட்ச சராசரி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்றார்.












Click it and Unblock the Notifications