ஈழப் படுகொலை சிடி: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: ஈழத் தமிழர் படுகொலையை சித்தரிக்கும் சிடியை விநியோகிப்பது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த பொது நலன் மனுவில்,
நானும் சில வக்கீல்களும் சேர்ந்து எரிகிறது தமிழ் ஈழம், நம் நெஞ்சில் பிறக்கிறது ஈரம்' என்ற தலைப்பில் சி.டி. ஒன்றை தயாரித்தோம். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் போராட்டம் நடத்தியபோது வக்கீல்கள் - போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தையும் அந்த சி.டி.யில் தொகுத்து இருந்தோம்.
இந்த சி.டி.யை ஒளிபரப்ப திட்டமிட்ட நிலையில் போலீசார் கைப்பற்றி விட்டனர். மேலும் சிலரை கைது செய்து விட்டனர். இது போலீசாரின் அத்து மீறல் நடவடிக்கை ஆகும். ஆகவே இந்த சி.டி. ஒளிபரப்பில் போலீசார் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications