வாக்கை மறுக்க '49ஓ'-கருத்து சொல்ல '17ஏ'-தேர்தல் ஆணையம்
டெல்லி: வாக்குப்பதிவு செய்ய விருபபம் இல்லாமல் இருப்பவர்கள் 49ஓ படிவத்தை நிரப்பி கொடுக்கலாம். தாங்கள் ஏன் வாக்களிக்க விரும்பவில்லை என அவர்கள் தங்களது கருத்தை 17ஏ படிவத்தில் நிரப்பி கொடுக்கலாம் என டெல்லி தேர்தல் ஆணையாளர் ஜே.கே.சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி உட்பட 85 தொகுதிகளில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் குறித்து டெல்ல தேர்தல் அதிகாரி ஜே.கே.சர்மா கூறுகையில்,
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நினைக்கும் வாக்காளர்கள் வாக்குக் சாவடிக்குச் சென்று ஓட்டுபோடாமல் இருக்க தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையை பயன்படுத்தலாம். அவர்கள் வாக்குச்சாவடிகளில் இருக்கும் 49ஓ படிவத்தை வாங்கி அதை நிரப்பி அங்கிருக்கும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டம் வாக்காளர்களுக்கு வாக்களிக்காமல் இருக்கும் உரிமையை வழங்குகிறது. ஆனால் அந்த உரிமையை பதிவு செய்யும் வசதி தற்போது வாக்குப் பதிவு எந்திரத்தில் இல்லை என்பதால் படிவத்தை கேட்டு வாங்கி கொள்ளவும்.
படிவத்தை கேட்கும் வாக்காளர்களுக்கு அதை கொடுக்கும்படி வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். டெல்லியில் இந்த தேர்தலில் எத்தனை பேர் இந்த படிவத்தை கேட்கிறார்கள் என்பது கண்டறிய திட்டமிட்டுள்ளோம்.
1961ம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதியின்படி வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் அதை பதிவு செய்யலாம். தாங்கள் ஏன் வாக்களிக்க விரும்பவில்லை என்ற கருத்தை அவர்கள் படிவம் 17ஏல் பதிவு செய்யலாம். பின்னர் அவர்களிடம் இருந்து அதில் கையெழுத்து அல்லது விரல் ரேகை பெறப்படும்.
வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் எண்ணிக்கையானது வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் இரண்டாவது இடத்தை பிடித்த வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தாலும் தேர்தல் செல்லாது என கூற முடியாது என்றார் ஜே.கே.சர்மா.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications