மதிமுக, சிபிஎம்முக்கு மனித நேய கட்சி திடீர் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேய மக்கள் கட்சி திடீரென மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியிலும், அதிமுக கூட்டணியிலும் இடம் கிடைக்காததால், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து புதுக் கூட்டணி அமைத்தது மனித நேய மக்கள் கட்சி.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்களை ஆதரிப்பதாக திடீரென அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது எனவும் அது கூறியுள்ளது.
இத்தகவலை மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தஞ்சையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications