ஆயுதங்களுடன் டெண்டர் எடுக்க வந்த இருவர் கைது
நெல்லை: நெல்லையில் சுருள்வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் டெண்டர் எடுக்க வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள மாட்டு சந்தையை குத்தகைக்கு ஏலம் எடுக்க எப்போதும் கடும் போட்டி இருக்கும். இந்நிலையில் தற்போது இந்த ஏலம் விடுவதற்கு டெண்டர் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
கடந்த முறை ஏலம் எடுத்தவர்களும், புதிதாக ஏலம் எடுக்க சிலரும் மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்திற்கு வந்தனர்.
இதற்கிடையே டெண்டர் மனு செய்பவர்களிடையே ஏதேனும் மோதல் ஏற்படலாம் என்று உளவுதுறையினர் போலீசார் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் டெண்டர் மனு செய்யப்படும் இடத்தில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன், சங்கரபாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சார்பில் சிலர் டெண்டர் மனு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் சோதனையிட்ட போது சுருள்வாள், இரும்பு ராடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் தென்காசி குளத்தூர் அய்யனார் தெருவை சேர்ந்த ஷேச் மீரான் மகன் சுலைமான், மேலப்பாளையத்தை சேர்ந்த காஜாமூகைதின் மகன் முகமது சாலி ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றன்ர.
சுலைமான் மீது ஏற்கனவே தென்காசி காவல் நிலையத்திலும், முகமது சாலி மீது அச்சன்புதூர் காவல் நிலையத்திலும் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications