பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு
பொள்ளாச்சி: பிரசாரத்தின் போது முற்றுகையிட்ட பொது மக்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமார் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் சுகுமார் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்னும் 3 நாட்களில் முடிந்துவிடும் என்பதால் அவர் தொகுதியில் சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்.
கிணத்துகடவு பகுதியில் காளியணண் புதூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அவருடன் கிணத்துக்கடவு அதிமுக எம்எல்ஏ தாமோதரன், மற்றும் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடன் சென்றனர்.
அப்போது கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையை சேர்ந்த சிலர் சுகுமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின் போது சுகுமார் அவர்களை கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சுகுமாரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையினர் நெகமம் - கோவில்பாளையம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து அதிமுக வேட்பாளர் சுகுமார், எம்எல்ஏ தாமோதிரன், செங்கோட்டையன், மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேசமயத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தடுத்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினரும் பொள்ளாச்சி சாலையில் மறியல் செய்தனர்.
இதையடுத்து அதிமுக பிரச்சராத்தை தடுத்த கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையைச் சேர்ந்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications