சென்னை வாலிபரின் பலே மோசடி-போலி பெண் டாக்டருக்கு வலை
சென்னை: மனித உரிமை ஆணையத்தின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த போலி பெண் டாக்டருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் சிவானந்தம் நகரை சேர்ந்தவர் சரவணன் கருப்பசாமி (34). எம்.ஏ. படித்தவர். உலக மனித உரிமை ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் என்று தன்னை கூறிக் கொண்டு பெரிய அளவில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் கருப்பசாமி.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியரை ஏமாற்றி அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து பலமுறை தங்கியுள்ளார். உலக மனித உரிமை ஆணையத்தின் செயல் அலுவலர் என்று பிரஸ் மீட்டும் செய்துள்ளார்.
மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக சேர்த்து விடுவதாக சொல்லி கோவை பகுதியில் ஏகப்பட்ட பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு நாமம் போட்டுள்ளார்.
இந்த நிலையில் கருப்பசாமியின் மோசடி வேலைகள் அம்பலமாகவே அவர் மீது கோவை போலீஸில் புகார்கள் குவிந்தன.
மனித உரிமை ஆணையத்தின் சார்பிலும் தனியாக போலீஸ் டி.ஜி.பி. ஜெயினிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கோவை சிபிசிஐடி போலீஸார் கருப்பசாமி மீது வழக்குப் பதிவு செய்தனர். கருப்பசாமியை வளைத்துப் பிடிக்க கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையின் வேட்டையில் கருப்பசாமி சிக்கிக் கொண்டார். அவரைக் கைது செய்துள்ள போலீஸார், அவருக்கு உடந்தையாக போலி பெண் டாக்டரான சக்தி என்பவரும் இருந்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
சக்தி போலி டாக்டர் என்பதே சரவணனுக்குத் தெரியாதாம். தன்னை டாக்டர் என்று கூறி, சரவணன் கருப்பசாமியிடம் அவர் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
சரவணன் செய்து வந்த மோசடியில் சக்திக்கும் பங்கு போயுள்ளதாம். அவரும் உதவியாக இருந்துள்ளார். இதையடுத்து சக்தி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். சக்தியையும் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
கருப்பசாமியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அதுகுறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என்று கோவை சிபிசிஐடி போலீஸார் அறிவித்துள்ளனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
- 0422-2303302.
- 9994277774.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications