அழகிரி குறித்து விமர்சனம்- அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
மதுரை: மதுரை ஆண்டாள்புரத்தில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் மு.க. அழகிரியை விமர்சனம் செய்ததைக் கண்டித்து அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை ஆண்டாள்புரத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. பேச்சாளர் பாண்டி என்பவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனும், தென் மண்டல அமைபுபச் செயலாருமான மு.க. அழகிரியை விமர்சனம் செய்து பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவைச் சேர்ந்த செல்லப்பாண்டி, கந்தன் மற்றும் சிலர் சேர்ந்து 41-வது வார்டு ஜெ., பேரவை செயலாளர் கார்த்திக்கை அரிவாளால் தாக்கினர்.
இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அரிவாளால் வெட்டிய கந்தனை அதிமுகவினர் வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து எம்.எல்.ஏ.,க்கள் போஸ், நன்மாறன், நகர செயலாளர் செல்லூர் ராஜூ, மார்க்சிஸ்ட் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் ஆண்டாள்புரத்திலும், சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பும் மறியல் போராட்டம் நடந்தினர்.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தினர்.
காயமடைந்த கார்த்திக் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
கைதான கந்தன் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டெக்னிக்கல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications