வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா - அதிமுக நிர்வாகிக்கு அடி உதை
கரூர்: கரூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கணேசனை திமுகவினர் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருப்பவர் கணேசன். இவர் சேங்கல் அருகே உள்ள பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்த திமுகவைச் சேர்ந்த ரமேஷ் பாபு, புதுக்கோட்டை ரவி உள்பட முக்கிய நிர்வாகிகள் அப் பகுதிக்கு சென்றனர். அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கணேசனை அடித்து உதைத்தனர்.
இதில் கணேசன் பலத்த காயம் அடைந்தார். அவரை திமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கணேசன் தலையிலிருந்து ரத்தம் கொட்டியதால், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த தாக்குதலை கண்டித்து அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் கரூர் தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்த்தில் அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, தேர்தல் தோல்வி பயத்தில் தி.மு.க.,வினர் ரவுடிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக்












Click it and Unblock the Notifications