பாஜக ஆட்சிக்கு வந்தால் சமத்துவம் உண்டாகும் - சரத்குமார்
நெல்லை: இந்தியாவில், சமத்துவம் மற்றும் சமதர்மம் என்ற புதிய சமுதாயம் உருவாக பாஜக ஆட்சி மலர வேண்டும் என்று நெல்லை தொகுதியில் நடந்த பிரசாரத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.
நெல்லை தொகுதி ச.ம.க. வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
மத்தியில் வலிமையான ஆட்சி வரவேண்டும் என்றால் பாஜக ஆட்சி வரவேண்டும். பாஜக ஆட்சியில்தான் பொருளாதார நெருக்கடி கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கிராமங்களையும், நகரங்களையும் இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாஜ ஆட்சியில்தான் கிடைத்தது.
சமத்துவம், சமதர்மம் என்ற புதிய சமுதாயம் உருவாக பாஜக ஆட்சி மலர வேண்டும். டாக்டர்கள் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். பாஜக தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது என்றார் சரத்குமார்.
சரத்குமார் பிரசாரத்தில் தேர்தல் விதிமுறையை மீறி அனுமதியில்லாமல் 2 வாகனங்கள் செல்வதாக கூறி அவற்றை போலீசார் மருதகுளத்தில் பிடித்தனர். இதனால் போலீசாருக்கும், ச.ம.க. நிர்வாகிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சரத்குமார், நான்குநேரி டிஎஸ்பி சிதம்பரநாதன், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆர்வ மிகுதியால் தொண்டர்கள் தெரியாமல் காரில் வந்து விட்டனர். அதனால் அவர்களை எச்சரித்து வாகனங்களை விட்டு விடுங்கள் என்றார் சரத்குமார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் வாகனங்களை விடுவிப்பதாக தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications