தமிழகம், புதுவையில் நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையுடன் லோக்சபா தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. வீடு வீடாக சென்று அமைதியான முறையில் வாக்கு கேட்கலாம்.
பிரசாரம் நாளையுடன் முடிவுக்கு வருவதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இன்று முடிக்கிறார் ஜெ..
அதிமுக கூட்டணி்க்கான பிரசாரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்றுடன் நிறைவு செய்கிறார். இன்று மாலை சேப்பாக்கத்தில் அவர் கடைசியாக பிரசாரம் செய்து தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து முடித்துவிட்டார்.
தேர்தல் களத்தில் நிற்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவகாசியிலும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் வடசென்னையிலும் முகாமிட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் வரதராஜன் மதுரையில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி முடித்து விட்டார்.
இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அவருடன் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டு பேசுகிறார்.
பாஜக சார்பில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.
நாளையுன் தேர்தல் பிரசாரம் முடிவதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications