3வது அணியிலிருந்து பாஜகவுக்கு தாவிய டிஆர்எஸ்.. அடுத்தது ஜெ.!

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக இடதுசாரிகள் உருவாக்கிய மூன்றாவது அணியில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மதசார்பற்ற ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன.
தேசியவாதக் கட்சியின் தலைவர் சரத்பவார் அங்கும் இங்குமாக காங்கிரஸ்-மூன்றாவது அணிக்கு இடையே அல்லாடிக் கொண்டுள்ளார்.
இந் நிலையில் ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 9 இடங்களில் போட்டியிட்டது.
இப்போது வாக்கு எண்ணிக்கைக்காக அந்த மாநில வேட்பாளர்கள் காத்துக் கொண்டுள்ள நிலையில் அரசியல் ஹைஜம்ப் செய்துள்ளது ராஷ்ட்ரீய சமிதி.
அக் கட்சி மூன்றாவது அணியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இதன்மூலம் மூன்றாவது அணியில் இருந்ததால் தன்னை நம்பி வாக்களித்த மக்கள் நெற்றியில் பட்டை நாமம் பூசியுள்ளார் அக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ்.
ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதாக பாஜக உறுதி அளித்துள்ளதால் தான் அணி மாறியதாக தெரிவி்த்துள்ளார்.
இப்போது பாஜக கூட்டணியில் பஞ்சாப்பில் அகாலிதளம், உத்தரப் பிரதேசத்தில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம், மகாராஷ்டிரத்தில் சிவசேனா, ஹரியாணாவில் ஓம்பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக்தளம், அஸ்ஸாம் கண பரிஷத், பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகள் உள்ளன.
இந் நிலையில் மூன்றாவது அணியில் உள்ள ஜெயலலிதாவும் தேர்தல் முடிவுக்குப் பின் பாஜக கூட்டணிக்கு வந்துவிடுவார் என்பது அக் கட்சியினர் மத்தியில் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அந்த நம்பிக்கையை ஜெயலலிதாவும் பொய்யாக்க மாட்டார் என்றே தெரிகிறது. ஜெயலலிதாவை கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலைகளில் அவருக்கு மிக நெருக்கமான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்றவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications