தேர்தலால் வங்கி பணிகளும் முடக்கம்!
செங்கோட்டை: தேர்தல் பணிகளில் ஈடுபட வங்கி ஊழியர்களுக்கு முதன் முறையாக பணி ஆணை வழங்கபட்டுள்ளதை அடுத்து வங்கி பணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு தமிழகத்தில் நாளை 13ம் தேதி நடக்கிறது. வாக்குபதிவு பணிகளை சிறப்பாக செய்து முடிக்க நெல்லை, தென்காசி பகுதிகளில் சுமார் 11 ஆயிரத்து 500 வேட்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுவாக தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்களும், பள்ளி ஆசிரியர்களும் தான் அதிகம் இடம்பெறுவார்கள். ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக முதன் முறையக வங்கி ஊழியர்களுக்கும் தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் பணியாற்றும் 14 ஊழியர்களும் தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் நேற்று 11ம் தேதி இங்கு பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களிடம், வங்கி வரும் 14ம் தேதி வரை செயல்படாது.
பணியாளர்கள் தேர்தல் பணிக்கு சென்றுள்ளதால் 15ம் தேதி வருமாறு வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பியது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் கனரா வங்கி, எஸ்பிஐ, ஐஓபி போன்ற வங்கிகளிலும் இதை நிலைதான். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களும் பெரும் அவதியடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications