வாக்குச்சாவடி தெரியலையா...எஸ்எம்எஸ் பண்ணுங்க
சென்னை: சென்னையில் இருக்கும் மூன்று தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் தாங்கள் ஓட்டு போடு்ம் வாக்குச்சாவடி எது என்பதை அறிந்து கொள்ள எஸ்எம்எஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 13 தொகுதிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை ஒரு தொகுதியில் இருந்த சில சட்டசபை தொகுதிகள் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் சில இடங்களில் மக்கள் தாங்கள் எந்த தொகுதியில் ஓட்டு போட வேண்டும், அதற்கான வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது போன்ற தகவல்கள் கிடைக்காமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இதன் காரணமாக சமீபத்தில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் வாக்குபதிவின் போது வாக்காளர்கள் எஸ்எம்எஸ் மூலம் தங்களது வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த புதிய வசதி தமிழகத்தில் சென்னையில் உள்ள மூன்று வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதி வாக்காளர்களுக்கும் கிடைக்க இருக்கிறது.
இந்த வசதியை பயன்படுத்த நினைப்பவர்கள் BOOTH என ஆங்கிலத்தில் டைப் செய்து, அதன் அருகில் உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணை டைப் செய்யவும், பின்னர் அதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்யவும்.
இதையடுத்து உங்களுக்கு மறுமுனையில் இருந்து பதிலுக்கு எஸ்எம்எஸ் வரும். அதில் நீங்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு வேளை உங்களது பெயர் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அது குறித்து உங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படும்.
இந்த இலவச சேவையை தென் சென்னையை சேர்ந்த கிழக்கு பதிப்பகம் என்ற நிறுவனம் செய்து தருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications