தேர்தல்-மேட்டூர் காவல் நிலையத்துக்கு பூட்டு!
மேட்டூர்: மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து போலீசார் அனைவரும் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டதை அடுத்து, அந்த காவல் நிலையத்துக்கு போலீசார் பூட்டு போட்டுள்ளனர்.
மேட்டூரில், பவானி மெயின்ரோட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், மூன்று ஏட்டுகள் என மொத்தம் ஐந்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்லை முன்னிட்டு சேலம் புறநகர் பகுதியைச் சேர்ந்த 33 காவல் நிலையம் மற்றும் ஐந்து மகளிர் காவல் நிலைய போலீசார் அனைவரும் சேலத்திற்கு வரழைக்கப்பட்டு, அங்கே அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் தங்கள் ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே போல் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட அனைவரும் தேர்தல் பணிக்காக நேற்று சேலம் புறப்பட்டு சென்று விட்டனர். இதையடுத்து நேற்று மேட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு பூட்டு போடப்பட்டது.
மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை ஒருநாளும் பூட்டியது இல்லை என்று காவல் துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புகார் கொடுக்க வரும் மக்கள் காவல் நிலையம் பூட்டியிருப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் திரும்புகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications