ஓட்டு போட உதவாத ரேசன் கார்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழே குறிப்பிட்ட 13 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன் விவரம்:

1. பாஸ்போர்ட்
2. டிரைவிங் லைசென்ஸ்
3. பேன் கார்ட்
4. மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அலுவலக அடையாள அட்டை
5. புகைப்படத்துடன் கூடிய பொதுத்துறை வங்கி மற்றும் தபால் அலுவலக கணக்கு புத்தகம் மற்றும் கிஸான் புக்
6. பட்டா, பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள்
7. புகைப்படத்துடன் கூடிய எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி. ஜாதிச் சான்றிதழ்கள்
8. பென்ஷன் புத்தகம், முன்னாள் படைவீரர் பென்ஷன் புத்தகம், முன்னாள் படைவீரரின் விதவையர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான ஆவணங்கள், விதவை பென்ஷன் ஆணை
9.சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை
10. ஆயுத உரிமங்கள்
11. ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை
12. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேலை நியமன ஆணை
13. தொழிலாளர் துறை வழங்கிய மருத்துவ இன்சூரன்ஸ் ஸ்மார்ட் கார்டுகள்.

இவை அனைத்தும் 28.2.2009க்கு முன் வழங்கப்பட்டவையாக இருக்க வேண்டும்

மேற்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்று, குடும்ப தலைவருக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அது பொருந்தும்.

ரேஷன் கார்டு அடையாள அட்டை இல்லை-குப்தா:

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ள 13 ஆவணங்களை வைத்து மட்டுமே ஓட்டுபோட முடியும். ரேஷன் கார்டை வாக்குப் பதிவுக்கான அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என தமிழக ‌தேர்தல் ஆணையாளர் நரரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் பல பகுதிகளும் ஓட்டுபோட ரேஷன் கார்டுகளை கொண்டு வந்த மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். ரேஷன் கார்டுகளை கொண்டு வந்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து பொது மக்கள் இது தங்களுக்கு தெரியாது என்றும் ஏன் முதலிலே தெரிவிக்கவில்லை என்றும் புலம்ப ஆரம்பித்தனர்.

மதுரை மாவட்டம், எழும‌லை பகுதிக்கு உட‌்பட்ட இ.பெருமாள்பட்டி வாக்குசாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த பல வாக்காளர் அடையாள அட்டைகளை கொண்டு வரவில்லை. கையில் ரேஷன் கார்டுகளை தான் வைத்திருந்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவர்களை, ஓட்டு போட அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அவர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சுமார் 45 நிமிடங்களுங்கு பின்னர் சில கட்சி நிர்வாகிகளை சேர்ந்த நிர்வாகிகள் வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

இதேபோல் தமிழகத்தில் பல இடங்களிலும் மக்கள் ரேஷன் கார்டுகளை எடுத்து வருவதுமாகவும், அதிகாரிகள் அனுமதிக்காமல் திரும்பி செல்வதுமாக உள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையம் போதிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தாது வருத்தம் அளிப்பதாகவும் மக்கள் அங்கலாயித்து கொண்டனர்.

அதே நேரத்தில் ரேஷன் கார்டு ஓட்டு போடுவதற்கான ஆவணமாக ஏற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+