பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும்-ராமதாஸ்
திண்டிவனம்: தமிழகத்தி்ல் திமுகவின் பணநாயகம் வெற்றி பெறாது. ஜனநாயகம் தான் வெற்றி பெறும். 40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என
பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் நேரு வீதியில் உள்ள முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் மனைவி சரஸ்வதி, மகன் டாக்டர் அன்புமணி, மருமகள் செளம்யா ஆகியோருடன் வந்து ராமதாஸ் ஓட்டு போட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
திமுக தலைவர் கருணாநிதி மீள முடியாத ஒரு களங்கத்தை தமிழகத்துக்கு ஏற்படுத்தி விட்டார். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் 2வது இடத்தில் இருந்த தமிழகத்தை முதலிடத்துக்கு மாற்றி கறைபடிந்த வரலாற்றை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால், பணநாயகம் வெற்றி பெறாது. ஜனநாயகம் தான் வெற்றி பெறும்.
40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக-காங்கிரசுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பாடம் கற்பித்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் நல்ல முடிவை தருவார்கள். ஊழல்களின் மொத்த உறைவிடமே திமுக தான். கள்ள ஓட்டு போடுவதை உருவாக்கியதும் திமுக தான். திமுகவினர் விஞ்ஞான முறையில் சிந்தித்து ஊழலை செய்பவர்கள். இந்த விஷயத்தில் அவர்களுடன் யாரும் போட்டி போடவே முடியாது என்றார்.
ஓட்டளிக்க ரூ. 1000 கோடி பணம்...
அன்புமணி கூறுகையில், சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத அளவுக்கு கடந்த 2 நாட்களாக ரூ.100 முதல் ரூ. 1000 வரை தமிழகத்தில் 4 கோடி வாக்காளர்களுக்கும் என ரூ. 1000 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி வெட்ககேடான செயல்களில் ஈடுபட்டுள்ள திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications