மேகாலயாவில் காங். ஆட்சி-லபாங் முதல்வரானார்
ஷில்லாங்: மேகலாயாவில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. லபாங் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.
மேகலாயாவில் தேசியவாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணியில் திடீர் பிளவு ஏற்பட்டது.
கடந்த மார்ச் மாதம் அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது இரு தரப்புக்கும் தலா 27 வாக்குகள் வி விழுந்தன. இதையடுத்து சபாநாயகர் தனது ஓட்டைப் பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றினார்.
அதற்கு முன்பாக நான்கு எம்.எல்.ஏக்களின் பதவியை அவர் பறித்து விட்டார். இதன் காரணாகவே அரசு வெற்றி பெற முடிந்ததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் புதிய ஆட்சியை அமைத்தது. லபாங் முதல்வராகப் பதவியேற்றார்.
மேகாலயாவில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 60. அதில் 26 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்தனர். ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் சுயேட்சைகள் 2 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இதனால் 37 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
ஆதரவு கொடுத்துள்ள ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு துணை முதல்வர் பதவி உள்பட 2 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications