என்டிடிவி 'எக்ஸிட் போல்': திமுக கூட்டணி-20: அதிமுக கூட்டணி-18: விஜய்காந்தால் கருணாநிதிக்கு லாபம்!

Subscribe to Oneindia Tamil

NDTV
டெல்லி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என என்.டி.டி.வி நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரம்:

கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் திமுக கூட்டணிக்கு மக்களிடையே 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. (2004ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இருந்த பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை விலகி அதிமுகவில் இணைந்துவிட்டன).

திமுக இழக்கும் இந்த 15 சதவீத வாக்குகளில் அதிமுகவுக்கு வெறும் 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. மிச்சமுள்ள 10 சதவீத வாக்குகளை விஜய்காந்தின் தேமுதிக சுருட்டிவிட்டது.

இதனால் மொத்தத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 42 சதவீத வாக்குகளும், அதிமுக-பாமக-மதிமுக-இடதுசாரிகள் கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

தேமுதிக 10 சதவீத வாக்குகளையும் மற்ற கட்சிகள் 8 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதன்மூலம் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் திமுக கூட்டணிக்கு 20 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என இந்த எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.

மீதமுள்ள ஒரு இடத்தில் வேறு கட்சி வெல்லும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இது எந்தக் கட்சி என்பதை தெரிவிக்கவில்லை.

இது பாஜகவாக இருக்கலாம் என்று தெரிகிறது. ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர், திமுக வேட்பாளர் ரித்தீஷ், அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரை வெல்வார் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் தேமுதிகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக தேர்தல் களம் கண்ட தேமுதிக 8.33 சதவீத வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை மேலும் கூடுதலாக 10 சதவீதம் வரை வாக்குளை அந்தக் கட்சி பெறும் என என்டிடிவி எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் எத்தனையோ தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் கருத்துக் கணிப்பு, எக்ஸிட் போல் ஆகியவற்றை வெளியிட்டாலும் தேசிய அளவில் சரியான முடிவை வெளியிட்டது என்டிடிவி தான் என்பது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+