தமிழகத்தில் 67% வாக்குப் பதிவு: கரூரி்ல் 80%-மதுரையில் 76%

தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரி்ல் 80 சதவீதமும் மதுரையில் 76.6 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
543 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு 5 கட்டமாக தேர்தல் நடந்தது. கடைசி கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும், மேலும் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், இமாசலப் பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
இதி்ல் தமிழகத்தில் 67 சதவீத வாக்குகள் பதிவாயின. தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:
1. திருவள்ளூர் (தனி) - 54%
2. வட சென்னை- 61%
3. தென் சென்னை- 62%
4. மத்திய சென்னை- 58%
5. ஸ்ரீபெரும்புதூர்- 65%
6. காஞ்சீபுரம் (தனி)- 66%
7. அரக்கோணம்- 65%
8. வேலூர்- 58%
9. கிருஷ்ணகிரி- 70%
10. தர்மபுரி- 70.5%
11. திருவண்ணாமலை- 69%
12. ஆரணி- 59%
13. விழுப்புரம் (தனி)- 70%
14. கள்ளக்குறிச்சி- 60%
15. சேலம்- 69%
16. நாமக்கல்- 75%
17. ஈரோடு- 71.6%
18. திருப்பூர்- 71%
19. நீலகிரி (தனி)- 62%
20. கோவை- 60%
21. பொள்ளாச்சி- 65.5%
22. திண்டுக்கல்- 68%
23. கரூர்- 80%
24. திருச்சி- 67%
25. பெரம்பலூர்- 71%
26. கடலூர்- 67%
27. சிதம்பரம் (தனி)- 74%
28. மயிலாடுதுறை- 70%
29. நாகப்பட்டினம் (தனி)- 69%
30. தஞ்சாவூர்- 68%
31. சிவகங்கை- 66%
32. மதுரை- 76.6%
33. தேனி- 62%
34. விருதுநகர்- 70%
35. ராமநாதபுரம்- 64.5%
36. தூத்துக்குடி- 65.7%
37. தென்காசி (தனி)- 63%
38. திருநெல்வேலி- 65%
39. கன்னியாகுமரி- 63.09%
40. புதுச்சேரி- 80%
நாளை மறுதினம் ஓட்டு எண்ணிக்கை:
நாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அடுத்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications