கருணாநிதி மீது தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்
சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக கூட்டணியினர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். முதல்வர் கருணாநிதியின் பிரச்சார கடிதமும் விளம்பரம் செய்யப்பட்டு்ள்ளது. இதையடுத்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
தேர்தல் விதிமுறைகளின்படி தமிழகத்தில் மே 11ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பின்னர் யாரும் எந்த வகையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
ஆனால், திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தங்களுக்கு வாக்களிக்குமாறு மீறி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளன. திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதமும் பத்திரிகைகளில் மே 12ம் தேதி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். எனவே திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மாலை 3 மணிக்குப் பிறகு திமுக கூட்டணி கட்சியினரால் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன. இந்த செயலுக்கு உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட் உதவியாக இருந்துள்ளார். திமுக கூட்டணியினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications