அடையாள அட்டை இருக்கு...ஆனா ஓட்டு இல்லை
நெல்லை: நெல்லை தொகுதியில் அடையாள அட்டை வைத்திருந்த பலருக்கு ஓட்டு இல்லாமல் போனது. அதே சமயத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் சிலருக்கு ஓட்டு இருந்தது. சிலருக்கு ஓட்டு இல்லை. இதையடுத்து வாக்காளர்களும் பலரும் புலம்பியபடி வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினர்.
தேர்தலில் கள்ளஓட்டு, ஆள்மாறட்டம் போன்றவற்றை ஓழிப்பதற்காக தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் முறையை கொண்டு வந்தது.
இந்நிலையில் ஒரு வாக்களாருக்கு பல தொகுதிகளில் வாக்குரி்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு இடத்துக்கு மேல் வாக்குரிமை பெற்றுள்ளவர்களை நீக்குவதற்காக தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்டது.
அப்போது வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்பட்டது. மேலும் அந்த வாக்காளர் அந்த வீட்டில் தான் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அப்படி இல்லாதவர்களின் பெயர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் தாயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இதில் ஒரே ஊருக்குள் வீடு மாறியவர்கள் போன்றவர்களின் வாக்குகளும் நீக்கப்பட்டுவிட்டன. இதற்கு வீடு மாறுபவர்கள் தங்கள் வீட்டு முகவரியை தங்களது ரேஷன் கார்டில் உடனடியாக மாற்றாததே காரணம் என தெரிகிறது.
இந்நிலையி்ல் நேற்று நடந்த தேர்தலில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு அவர்களது பெயர் பட்டியலில் இல்லை என்பதை கண்டு அதிர்ந்து போயினர். கடந்த தேர்தலில் ஓட்டு போட்டேன். இந்த தேர்தலில் வாக்கு இல்லையே என பலர் புலம்புவதை காண முடிந்தது.
சில இடங்களில் கணவருக்கு ஓட்டு இருந்தது. ஆனால், மனைவிக்கு ஓட்டு இல்லை. சில இடங்களில் மகன்கள் மற்றும் மகளுக்கு ஓட்டு இருந்தது. அவர்களது பெற்றோருக்கு ஓட்டு இல்லை. இப்படி பல குளறுபடி ஏற்பட்டதால் பலரும வாக்களிக்க முடியாமல் புலம்பியபடி வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications