பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு - 83% பேர் தேர்ச்சி
சென்னை : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 6 லட்சத்து 409 ஆயிரத்து 844 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணியளவில் வெளியிடப்பட்டன.
மொத்தம் 83 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை சூளைமேடு டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவி வி.பூமிகா 1190 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதே பள்ளியின் மாணவர் கார்த்திக் 1188 மதிப்பெண்களுடன் 2வது இடத்தையும், கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குமரன், ராம் கிஷோர் ஆகியோர் தலா 1186 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இருப்பினும் இந்த மூன்று பேருக்கும் தமிழக அரசின் ரேங்க் கிடைக்காது. காரணம், இவர்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள்.
வழக்கம்போல் மாணவிகள் ஆதிக்கம்...
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 84.4 சதவீதம் பேர் தேர்வாகி இருந்தனர். ஆனால் தற்போது இது லேசான சரிவை சந்தித்துள்ளது. இம்முறை 83 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல் இம்முறையும் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 85.5 சதவீதமும், மாணவர்களில் 80.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
200க்கு 200 பெற்ற மாணவர்கள் :
இயற்பியல் - 245 மாணவர்கள் .
வேதியியல் - 467.
தாவரவியல் - 6
விலங்கியல் - 1.
உயிரியல் - 218
கணிதம் - 4060
கம்ப்யூட்டர் அறிவியல் - 276
வணிகவியல் - 285
வணிக கணிதம் - 198
கணக்கியல் - 621.
மொத்தம் 60 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர்: 3,83,762 பேர்.
மாணவர்களில் 80.3 சதவீதம் பேரும், மாணவிகளில் 85.5 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications