கேரளா, மே. வங்கத்தில் இடதுசாரிகளுக்கு சரிவு - என்டிடிவி எக்சிட் போல்

கேரளா..
கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த முறையை விட இந்த முறை இடதுசாரிகளுக்கு தொகுதிகள் குறையும்.
இம்முறை இடதுசாரிகள் அடங்கிய 3வது அணிக்கு 10 சீட்கள் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள பத்து சீட்களையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெறும்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்திலும் இடதுசாரிகளுக்கு சரிவு ஏற்படும். இங்கு திரிணமூல் காங்கிரஸுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துப் போட்டியிட்டதால்,இடதுசாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள 42 தொகுதிகளில் இடதுசாரிகளுக்கு இம்முறை 22 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். காங்கிரஸ், திரிணமூல் இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும்.
கடந்த தேர்தலை விட 13 சீட்கள் இடதுசாரிகளுக்கு இந்த முறை குறைகிறது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் பாஜக அணி தொடர்ந்து வலுவுடன் உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 17 சீட்கள் கிடைக்கும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 11 இடங்கள் கிடைக்கும். 3வது அணிக்கு ஒரு இடம் கிடைக்கும்.
ராஜஸ்தான்
ராஜஸ்தானைப் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலவுகிறது. கிட்டத்தட்ட இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.
மொத்தம் உள்ள 25 சீட்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 12 இடங்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்காலம். 3வது அணிக்கு ஒரு இடம் கிடைக்கும்.
கடந்த முறையை விட இந்த முறை ராஜஸ்தானில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 9 இடங்களை இழக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கு 8 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
ஒரிசா
ஒரிசாவில் பிஜூ ஜனதாதளம், பாஜக இடையே ஏற்பட்ட பிளவால், காங்கிரஸ் கூட்டணிக்கு பலன் கிடைத்துள்ளது.
அங்குள்ள 21 சீட்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 10 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த முறை 3 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எட்டு இடங்கள் குறைந்து 2 இடம் மட்டுமே கிடைக்கும்.
பிஜூ ஜனதாதளம் தலைமையிலான 3வது அணிக்கு 9 இடங்கள் கிடைக்கும். 3வது அணிக்கு கடந்த முறையை விட இந்த முறை 2 இடங்கள் குறைவாக கிடைக்கிறது.
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கை பலமாகவே ஓங்கியுள்ளது. அங்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பத்து சீட்கள் கிடைக்கும்.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெறும் 3 சீட்கள் மட்டுமே கிடைக்குமாம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இந்த முறை கூடுதலாக 8 சீட்கள் கிடைக்கிறது. தேஜகூவுக்கு 8 சீட்கள் குறைகின்றன.
ஹரியானா
ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு சரிந்து காணப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணிக்கு இங்கு 5 இடங்கள் கிடைக்கும். கடந்த முறையை விட இந்த முறை நான்கு சீட்கள் குறையப் போகிறது காங்கிரஸுக்கு.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3 இடங்களும், 3வது அணிக்கு 1 இடமும் கிடைக்கும். இன்னொரு இடம் வேறு அணிக்கு போகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இம்முறை 2 இடங்கள் கூடுதலாக கிடைக்கிறது.
டெல்லி
டெல்லியில் காங்கிரஸ் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.
மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 6 இடங்களும், மீதமுள்ள ஒரு இடம் பாஜக கூட்டணிக்கும் கிடைக்கிறது.
கடந்த முறையும் இதே ரிசல்ட்தான் இங்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காங் கூட்டணிக்கு 216 - தே.ஜ.கூ.வுக்கு 177
ஒட்டுமொத்தமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 216 இடங்கள் வரை கிடைக்கக் கூடும். இது பெரும்பான்மை பலத்திற்கு 56 இடங்களே குறைவாகும்.
மறுபக்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 177 இடங்களே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தனியாக 160 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 130 இடங்கள் கிடைக்கலாம். 3வது அணிக்கு 100 இடங்களுக்கு மேல் கிடைக்கும். ஆனால் அதில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகளுக்கு இந்த முறை 35 தொகுதிகளுக்கும் குறைவாகவே கிடைக்கும்.
காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த முறை சில எதிர்பாராத இடங்களிலிருந்து கூடுதல் இடங்கள் கிடைக்கவுள்ளன. அதேசமயம், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆச்சரிய முடிவுகள் கிடைக்காத நிலை உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications