30 சீட்கள் கிடைக்கும்: தெலுங்கு தேசம் எக்சிட் போல்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் தலைமையிலான மகா கூட்டணிக்கு ஆந்திராவில் 30 எம்.பி சீட் கிடைக்கும் எனவும், காங்கிரஸ் கூட்டணிக்கு 10 சீட் கிடைக்கும் எனவும் தெலுங்குதேசம் கட்சி நடத்திய எக்சிட் போல் கூறுகிறது.
டிவி சானல்களுக்குப் போட்டியாக இப்போது கட்சிகளும் எக்சிட் போல் சர்வேயில் இறங்கி விட்டன. ஏற்கனவே காங்கிரஸ், பாஜக ஆகியவை எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் தனது எக்சிட் போல் முடிவை இன்று வெளியிட்டது. இருப்பினும் இது ஆந்திராவை மட்டுமே கணக்கில் கொண்ட எக்சிட் போல் ஆகும்.
அதன்படி சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான அணிக்கு 179 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 57 இடங்களும், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியத்திற்கு 21 இடங்களும், பாஜகவுக்கு 3, எம்ஐஎம்முக்கு 4, சுயேச்சைகளுக்கு 4 என கிடைக்குமாம்.
லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 30, காங்கிரஸுக்கு 10, பிரஜா ராஜ்ஜியத்திற்கு 2 என கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications