For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 72.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக முன்பு அறிவித்த தேர்தல் ஆணையம் தற்போது 72.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 80.95 சதவீதமும், குறைந்த அளவாக மத்திய சென்னையில் 61.13 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் சதவீதமும் மாறியுள்ளது.

இறுதி வாக்குப் பதிவு நிலவரம்..

1.கரூர் - 80.95 சதவீதம்.
2.திருவண்ணாமலை - 80.60
3.நாமக்கல் - 78.64
4.பெரம்பலூர் - 78.30
5.அரக்கோணம் - 78.10
6.நாகப்பட்டினம் (தனி) - 77.60

மதுரையில் 77.52 சதவீதம்

7.மதுரை - 77.52
8.கள்ளக்குறிச்சி - 76.76
9.சேலம் - 76.73
10.கடலூர் - 75.98
11.விருதுநகர் - 75.33
12.ஆரணி - 75.20
13.தேனி - 75.07
14.சிதம்பரம் (தனி) - 75.00
15.விழுப்புரம் (தனி) - 74.90
16.திருப்பூர் - 74.60
17.திண்டுக்கல் - 74.60
18.காஞ்சிபுரம் (தனி) - 74.00
19:ஈரோடு - 74.00
20.பொள்ளாச்சி - 73.62
21.தஞ்சாவூர் - 73.55
22.மயிலாடுதுறை - 72.60
23.வேலூர் - 72.10
24.சிவகங்கை - 71.21
25.கோவை - 70.83
26.நீலகிரி (தனி) - 70.70
27.தர்மபுரி - 70.53
28.கிருஷ்ணகிரி - 70.13
29.தென்காசி (தனி) - 70.13
30.திருவள்ளூர் (தனி) - 69.19
31.தூத்துக்குடி - 69.09
32.ராமநாதபுரம் - 68.41
33.திருச்சி - 67.88
34.ஸ்ரீபெரும்புதூர் - 66.40
35.நெல்லை - 66.21
36.கன்னியாகுமரி - 64.50
37.வட சென்னை - 63.50
38.தென் சென்னை - 63
39.மத்திய சென்னை - 61.13

தலைநகர் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகள் மற்றும் கற்றோர் அதிகம் உள்ள கன்னியாகுமரி தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் 65 சதவீதத்தைக் கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X