மீண்டும் மன்மோகன் சிங்கே பிரதமர்-சோனியா
டெல்லி: தேர்தலில் வாக்களித்தபடி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையில் அமையும் அரசின் பிரதமராக மன்மோகன் சிங்கே நீடிப்பார் என்றும், ராகுல் காந்தியை பிரதமராக்கும் திட்டம் இல்லை என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.
நாடுமுழுக்க காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும்.
அப்போது சோனியா காந்தி கூறியதாவது:
இந்தத் தேர்தல் முடிவுகள் மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி.
மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ராகுல் காந்தியைப் பிரதமராக்கும் எண்ணம் இல்லை. உபியில் மீண்டும் காங்கிரஸ் பெரும் பெற்றதற்கு ராகுல் காந்தியைப் பாராட்டுகிறேன், என்றார் சோனியா.












Click it and Unblock the Notifications