குட்டிக் கட்சிகளுக்கு வலை வீச்சை தொடங்கியது காங்.
டெல்லி: தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட தெளிவாகி விட்டதால், அடுத்த கட்ட நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவைப்படும் ஆதரவுக்காக குட்டிக் கட்சிகளையும், சுயேச்சைகளையும் வளைத்துப் பிடிக்க கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களுக்கு வேலை கொடுத்துள்ளார் தலைவர் சோனியா காந்தி.
குறிப்பாக மூன்றாவது அணியைச் சேர்ந்த முக்கிய கட்சிகள், 2 அல்லது 3 எம்.பிக்கள் வரை பெறப் போகும் கட்சிகள் உள்ளிட்டோரையும், சுயேச்சைகளையும் வளைத்துப் பிடிக்கும் பணி இந்தத் தலைவர்களுக்கு தரப்பட்டுள்ளது.
முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தீர்மானித்து களம் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் நிம்மதியாக திமுக கூட்டணிக்கு 27 இடங்கள் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதேபோல ஆந்திராவில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் ஆதரவைப் பெறவும் காங்கிரஸ் முயற்சிகளில் இறங்கியுள்ளது. தற்போது சிரஞ்சீவி, நான்காவது அணியில் உள்ளார். நான்காவது அணி கடைசியாக காங்கிரஸுக்கே ஆதரவு தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் சிரஞ்சீவி கட்சியின் ஆதரவும் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல ஒரிசாவில் பிஜூ ஜனதாதளத்தின் ஆதரவைப் பெறுவற்காக, முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பேசுவதற்காக கமல்நாத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான்காவது அணியை அப்படியே காங்கிரஸ் அணிக்குக் கொண்டு வரும் வேலை அகமது படேலிடம் தரப்பட்டுளளதாம். ஏற்கனவே அவர் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், அமர்சிங்குடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி விட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது கிட்டத்தட்ட 250 தொகுதிகளில் வெல்லும் நிலை காணப்படுகிறது. ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கை 272 ஆகும். எனவே இன்னும் கிட்டத்தட்ட 30 எம்.பிக்கள் வரை தேவைப்படுவர். இதை எளிதில் திரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் உள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications