9 இடங்களில் அதிமுக வெற்றி-ஜெவுக்கு ராசியான எண்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1. மயிலாடுதுறை - அய்யரை வென்றார் அதிமுக மணியன்

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யரை, அதிமுகவின் ஓ.எஸ்.மணியன் வென்றார்.

36 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.எஸ்.மணியன் வென்றுள்ளார்.

வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள்

ஓ.எஸ்.மணியன் (அதிமுக) - 3,64,089
மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)-3,27,235
பாண்டியன் (தேமுதிக)- 44,745
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)- 19,814.

2. தென் சென்னையை வென்றது அதிமுக

தென் சென்னை தொகுதியில், வெற்றி பெற்று அத்தொகுதியை திமுகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது அதிமுக.

கடந்த லோக்சபாவில் டி.ஆர்.பாலுவை எம்.பியாக கொண்டிருந்த தென் சென்னை தொகுதியில் இம்முறை திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், அதிமுக சார்பில் சிட்லபாக்கம் ராஜேந்திரனும் மோதினர். பாஜகவின் இல.கணேசனும் களத்தில் இருந்தார்.

இந்த முக்கோணப் போட்டியில், சிறிய இழுபறிக்குப் பின்னர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

32 ஆயிரத்து 446 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக இங்கு வென்று, திமுகவிடமிருந்து தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.

3. திருப்பூர்- அதிமுகவின் சிவசாமி வெற்றி

திருப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி, 85 ஆயிரத்து 346 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருப்பூர் தொகுதியில், அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் நேரடிப் போட்டியில் ஈடுபட்டிருந்தன.

இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி்ட்டிங் எம்.பி. கார்வேந்தனை, அதிமுக வேட்பாளர் சிவசாமி, 85 ஆயிரத்து 346 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

வாக்கு விவரம்..

சிவசாமி (அதிமுக) - 2,95,731.
கார்வேந்தன் (காங்.) - 2,10,385.

4. விழுப்புரத்தில் அதிமுக வெற்றி

விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.

விழுப்புரம் தொகுதியில் ஆரம்பத்திலிருந்தே அதிமுகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நீதிபதி சாமிதுரைக்கும் இடையே கடும் இழுபறி காணப்பட்டது.

இறுதியில், அதிமுக வேட்பாளர் ஆனந்தன் 2797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விழுப்புரம் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி. இத்தொகுதியின் முதல் உறுப்பினராகியுள்ளார் ஆனந்தன்.

5. திருச்சியில் அதிமுக வெற்றி

திருச்சி தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.

கடந்த முறை மதிமுக வெற்றி பெற்ற திருச்சி தொகுதியில் இந்த முறை அதிமுக சார்பில் ப.குமாரும், காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டமானும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கிடையே கடும் இழுபறி நிலவியது.

இரு வேட்பாளர்களுக்கும் இடையே மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசமே காணப்பட்டது. இறுதியில் 2900 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ப.குமார் வெற்றி பெற்றார்.

6. கரூரில் தம்பித்துரை வெற்றி

கரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் தம்பித்துரை வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான கே.சி.பழனிச்சாமியை 49 ஆயிரத்து 149 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்..

தம்பித்துரை - 3,80,461
கே.சி.பழனிச்சாமி - 3,31,312.

7. திருவள்ளூரில் அதிமுக வெற்றி

திருவள்ளூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் காயத்ரி ஸ்ரீதரனை விட 31 ஆயிரத்து 673 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் வேணுகோபால்.

திருவள்ளூரில் பதிவான வாக்குகள்..

டாக்டர் வேணுகோபால்(அதிமுக)-3,68,237
காயத்ரிஸ்ரீதரன்(திமுக)-3,36,185
சுரேஷ்(தேமுதிக)-1,10,442.

8. பொள்ளாச்சியில் அதிமுகவுக்கு வெற்றி

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகுமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சண்முகசுந்தரத்தை 46 ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்தத் தொகுதியில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை வேட்பாளரான பெஸ்ட் ராமசாமி 1 லட்சத்து 3 ஆயிரத்து 4 வாக்குகளைப் பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள்: 10,17399
பதிவானவை: 7,69,303
கே.சுகுமார் (அதிமுக.)-3,05,935
கு.சண்முக சுந்தரம் (திமுக.)2,59,910
பெஸ்ட் எஸ்.ராமசாமி (கொமுபே)-1,03,004
கே.பி.தங்கவேல் (தேமுதிக.)-38,824
பாபா ரமேஷ் ( பா.ஜ.க)-16,815.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+