ஊரக வளர்ச்சித்துறை அமைச்சாகிறார் ராகுல்?
டெல்லி: விரைவில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் ராகுல் காந்திக்கு ஊரக வளர்ச்சி துறை வழங்கப்படும் என்று தெரிகிறது.
இது தவிர இளம் காங்கிரஸ் தலைவர்களான ஜோதிர் ஆதித்திய சிந்தியா மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க மற்றவர்களின் கையை அதிகம் எதிர்பார்க்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடு்தது காங்கிரஸ் முக்கிய அமைச்சர்கள் பதவியை தாங்களே வைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம்...
இந்நிலையில் இன்று உயர்மட்டக் குழு கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது. இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில், ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அவருக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ராகுல் காந்திக்கு நெருக்கமான இளம் காங்கிரஸ் ரத்தங்களான ஜோதிர் ஆதித்திய சிந்தியா, சச்சின் பைலட், ஜிதின் பிரசாதா ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது.
யாருக்கு ரயில்வே...
மதுரை தொகுதியில் வென்ற திமுக தென்மாவட்ட அமைப்பாளர் அழகிரிக்கு ரயில்வே துறையை திமுக கேட்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 தொகுதிகளை கைவசம் வைத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி என்ற பெருமையுடன் உள்ள மம்தா பானர்ஜி தனக்கு ரயில்வே துறை வேண்டும் என கேட்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தற்போது ரயில்வே துறை அமைச்சராக இருக்கும் லாலுவும் கூட்டணிக்கு வருவது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அவர் ரயில்வே துறையை தன்னிடமே கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்ககூடும். இதையடுத்து ரயில்வே துறையை யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் காங்கிரசை புதிதாக தொற்றி கொண்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜியே தொடரலாம் என்று தெரிகிறது.
உள்துறை அமைச்சராக சிதம்பரமும், பாதுகாப்பு அமைச்சராக அந்தோணியும் தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற சிதம்பரம்:
இந் நிலையில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், டி.ஆர். பாலு, ராசா ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அதே போல முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் வாழ்த்து பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications