அதிமுகவை 7, பாமகவை 5ல் வீழ்த்திய திமுக!

Subscribe to Oneindia Tamil

DMK Symbol
சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுகவை 7 தொகுதிகளிலும், பாமகவை 5 தொகுதிகளிலும் திமுக வீழ்த்தியுள்ளது. மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளை தலா 2 தொகுதிகளில் திமுக வென்றுள்ளது.

அதே நேரத்தில் தான் தோற்ற 4 தொகுதிகளையும் அதிமுகவிடமே இழந்துள்ளது திமுக.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 28 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும்,

அதிமுக, மதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இன்னொரு கூட்டணியாகவும் மோதின.

தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. பாஜக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இன்னொரு கூட்டணியாக போட்டியிட்டன.

திமுகவுக்கு கூடுதலாக 2 இடம்:

இந்தத் தேர்தலில் திமுக 22 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் வேலூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளரும் அடங்குவார். இவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் திமுக எம்பியாகவே மக்களவையில் கருதப்படுவார்.

இந்தத் தேர்தலில் அதிமுகவை 7 தொகுதிகளிலும், பாமகவை 5 தொகுதிகளிலும் திமுக வீழ்த்தியுள்ளது. மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளை தலா 2 தொகுதிகளில் திமுக வென்றுள்ளது.

திமுக அதிமுகவை வென்ற இடங்கள்:

மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி.

பாமகவை வென்ற இடங்கள்:

ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி.

இடதுசாரிகளை..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மதுரை, கன்னியாகுமரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நாகப்பட்டிணம், வட சென்னை என தலா 2 தொகுதிகளில் திமுக வென்றுள்ளது.

மதிமுவை வென்ற 2 இடங்கள்:

தஞ்சாவூர், நீலகிரி.

4 இடங்களிலும் அதிமுகவிடம் தோல்வி:

திமுக தென் சென்னை, திருவள்ளூர், கரூர், பொள்ளாச்சி ஆகிய 4 தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. அந்த 3 தொகுதிகளையும் அதிமுகவிடமே இழந்துள்ளது.

கடந்த முறை 16 எம்பிக்களைக் கொண்டிருந்த திமுகவுக்கு இம்முறை கூடுதலாக 2 எம்பிக்கள் கிடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+