அழகிரி-கனிமொழிக்கு பதவி?-பாலுவுக்கு சபாநாயகர் பதவி கோரும் திமுக!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் அழகிரிக்கும், கனிமொழிக்கும் மட்டுமே கேபினட் பதவி தரப்படும் என்று தெரிகிறது.
இவர்களோடு ராசாவுக்கும் சேர்த்து 3 கேபினட் பதவிகளை திமுக கோருவதாகவும் ஆனால், திமுகவுக்கு 2 பதவிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி வருவதாகவும் தெரிகிறது.
கடந்த முறை திமுக சார்பில் 3 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். 4 இணையமைச்சர்கள் இருந்தனர்.
இந் நிலையில் இம்முறை டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி தர திமுக தயாராக இல்லை என்று தெரிகிறது.
அவருக்கு சபாநாயகர் பதவி தர வேண்டும் என்று திமுக கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அந்தப் பதவியை காங்கிரஸ் தானே வைத்துக் கொள்ள விரும்புவதாகவும், அதை மூத்த தலைவரான சுசில் குமார் ஷிண்டேவுக்குத் தர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போல தயாநிதி மாறனுக்கும் அமைச்சர் பதவி தரப்படாது என்று தெரிகிறது.
திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகியோருக்கு இணையமைச்சர் பதவி தரப்படலாம் என்றும் தெரிகிறது.
அதே நேரத்தில் திமுகவுக்கு இம்முறை கப்பல் போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற துறைகள் தரவும் காங்கிரஸ் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் கருணாநிதி சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற திமுக தலைவர் பாலு:
முன்னதாக நாடாளுமன்றத் திமுக தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார்.
சென்னையில் இன்று திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான திமுக கட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இரு அவைகளின் கட்சிக் குழுக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications