எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 முன்னாள் முதல்வர்கள்
டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 24 முன்னாள் முதல்வர்களில் 20 பேர் வெற்றி பெற்று எம்.பியாகியுள்ளனர்.
ஜார்க்கண்ட், கர்நாடகத்திலிருந்து மட்டும் தலா 4 முன்னாள் முதல்வர்கள் லோக்சபாவுக்கு செல்கின்றனர். அவர்கள் சிபு சோரன், பாபுலால் மரான்டி, அர்ஜூன் முன்டா, மது கோடா (நால்வரும் ஜார்க்கண்ட்), குமாரசாமி, வீரப்ப மொய்லி, தரம்சிங், தேவெ கெளடா (நால்வரும் கர்நாடகா).
ராம் விலாஸ் பாஸ்வானை வென்று முன்னாள் பீகார் முதல்வர் ராம் சுந்தர் தாஸ், லோக்சபாவுக்கு செல்கிறார்.
இன்னொரு பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சரன் தொகுதியில் வென்றார், பாடலிபுத்திராவில் தோல்வியுற்றார்.
டெல்லி முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜ், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லால், உ.பி. முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங் யாதவ், கல்யாண் சிங் ஆகியோரும் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
31 குற்ற எம்.பிக்கள்...
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 80 எம்.பிக்களில் 31 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். அதிலும் 22 பேர் மீது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக உ.பியிலிருந்து தேர்வாகும் எம்.பி்க்கள்தான் அதிக குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள். அதை இம்முறையும் உ.பி. மாநிலம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கடந்த தேர்தலின்போது உ.பியிலிருந்து 28 எம்.பிக்கள் குற்றப் பின்னணி உடையவர்களாக இருந்தனர். தற்போது இது அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 150 எம்.பிக்கள் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர். இது கடந்த லோக்சபாவில் 128 ஆக இருந்தது.
சாதாரண குற்றப் பின்னணி உடைய எம்.பிக்களின் எண்ணிக்கை 17.2 சதவீதம் உயர்ந்துள்ளது. கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை 30.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்களின் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா 2வது இடத்தில் உள்ளது. இங்கு 23 எம்.பிக்கள் கறை படிந்தவர்கள். இவர்களில் 9 பேர் மீது கடுமையான குற்றப் பின்னணி உள்ளது.
டாப் 10 'கேடி'களில் உ.பிக்கு முதலிடம்..
அதேபோல இந்தியாவின் டாப் 10 குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள் பட்டியலில் 3 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் லாலு பிரசாத் யாதவின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்களை அதிகம் கொண்டிருக்கும் கட்சி பாஜகதான். அக்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களின் எண்ணிக்கை 42. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் உள்ளது. இதன் பங்கு 41 ஆகும். சமாஜ்வாடி கட்சிக்கு 8, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 பேரும் உள்ளனர்.
-
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications