வாந்தி, பேதி-50 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மக்கள் வாந்தி-பேதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள பூலாங்குளம் கிராமம், பால்பண்னை தெருவை சேர்ந்த சிலருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த மேலும் 50 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனையிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் கூறுகையில்,
எங்கள் தெருவில் குடிநீர் தொட்டி சுகாதாரமான இடத்தில் இல்லை. அதில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரை பால்பண்ணை தெருவை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எனது மனைவி வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டார். நேற்று எனக்கும் வாந்தி பேதி ஏற்பட்டது என்றார்.
பூலாங்குளத்தில் கடந்த முறை பருவ மழையின்போது இதே ஊரை சேர்ந்த குழந்தைகள் உள்பட பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். தற்போது கோடையிலும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த திடீர் வாந்தி, பேதிக்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications