'தப்பிப் பிழைத்தவர்கள்': ப.சிக்கு 2வது இடம்!
சென்னை: குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக எம்.பிக்கள் வரிசையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 2வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் இருப்பவர் அதிமுகவின் விழுப்புரம் உறுப்பினராக தேர்வாகியுள்ள எம். ஆனந்தன்.
தமிழகத்திலேயே மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ஆனந்தன்தான். விழுப்புரம் தொகுதியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் சாமித்துரையை 2797 வாக்குகளில் தோற்கடித்துள்ளார் ஆனந்தன். இவர் முன்னாள் தமிழக அமைச்சர் ஆவார்.
ப.சிதம்பரம் 2வது இடத்தில்..
உள்துறை அமைச்சரும், தேசிய அளவில் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவருமான, காங்கிரஸ் கட்சியின் நிதி மேதை எனப் புகழப்படுபவருமான ப.சிதம்பரம் தப்பிப் பிழைத்து ஜெயித்தவர்கள் வரிசையில் 2வது இடத்தில் உள்ளார்.
8 முறை சிவகங்கையில் போட்டியிட்ட சிதம்பரம் 7முறை இங்கு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இந்த முறைதான் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் சிதம்பரம்.
கடந்த ஆறு முறையும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து வந்தவர் சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இம்முறை நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ராஜ கண்ணப்பன் தான் வெற்றி பெற்றதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் ஆலங்குடி சட்டசபைத் தொகுதி வாக்குகளை திரும்ப எண்ண வைத்து அதன் பின்னர் சிதம்பரம் ஜெயித்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
ராஜ கண்ணப்பனை ஜஸ்ட் 3354 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றுள்ளார் ப.சிதம்பரம்.
திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டமானை விட 4335 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய அதிமுக வேட்பாளர் குமார் இந்த வரிசையி்ல் 3வதாக உள்ளார்.
அதிக வாக்கு வித்தியாசம்-திமுக முன்னணி..
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற முதல் மூன்று பேருமே திமுகவைச் சேர்ந்தவர்கள்.
திருவண்ணாமலையில் வென்ற வேணுகோபால், பாமக வேட்பாளர் காடுவெட்டி குருவை 1,48,300 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்திலும், மதுரையில் 1,40,985 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மு.க.அழகிரி 2வது இடத்திலும், தர்மபுரியில் 1,35,942 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தாமரை செல்வன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications