22ம் தேதி மத்திய அரசு பதவியேற்பு!-காங்.குக்கு மாயாவதி ஆதரவு

மேலும் லோக்சபா காங்கிரஸ் தலைவராக பிரணாப் முகர்ஜியும், ராஜ்யசபா காங்கிரஸ் தலைவராக மன்மோகன் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்பி்க்களின் கூட்டம் நாடாளும்ன்றத்தின் மத்திய மண்டபத்தில் இன்று காலை நடந்தது. இதில் இந்தப் பதவிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நாளை நடக்கிறது. இதி்ல் கூட்டணியின் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்படுவார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து இந்தக் கூட்டணிக் கட்சிகள் கடிதம் வழங்கும்.
இதையடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரி ஜனாதிபதியிடம் மன்மோகன் சிங் கடிதம் வழங்குவார். இதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க மன்மோகனுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்கிவிட்டு வரும் வெள்ளிக்கிழமை புதிய அரசு பதவியேற்கும் என்று தெரிகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சி்யமைக்க மேலும் 10 எம்பிக்களின் ஆதரவே தேவை.
இந் நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் முன் வந்துள்ளது. அந்தக் கட்சிக்கு 3 எம்பிக்கள் உள்ளனர்.
இவர்கள் தவிர சீட் கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற இரு அதிருப்தி காங்கிரஸ் எம்பிக்களும் ஆதரவு தர முன் வந்துள்ளனர்.
அதே போல 4 எம்பிக்கள் கொண்ட லாலு பிரசாத் யாதவும் ஆதரிக்க முன் வந்துள்ளார்.
இவர்களை எல்லாம் தவிர, காங்கிரஸ் கூட்டணிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் நிபந்தனையின்றி ஆதரிக்க முன் வந்துள்ளது. அந்தக் கட்சிக்கு 21 எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மெஜாரிட்டியை நிரூபிப்பதில் காங்கிரசுக்கு எந்த சிக்கலும் இல்லை.
இதற்கிடையே வரும் 22ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications