பிரபாகரன் உள்ளிட்டோர் உடல்களை அடையாளம் காட்டிய கருணா!
வன்னி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார்.
இதன் மூலம் புலிகளின் இறந்த உடல்களையும் காட்டிக் கொடுத்தவர் என்ற 'பெருமை' அவருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகள் குறித்து இலங்கை ராணுவத்திடம் முழுமையான தகவல்கள் இல்லை. முன்னாள் புலிகள் இயக்கத்தினரை வைத்துத்தான் பிடிபட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் அவர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளைக் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. இந்த சண்டையின்போது பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அது கூறியது. இவர்களில் பிரபாகரன் இறந்தது குறித்து குழப்பச் செய்திகளை வெளியிட்ட இலங்கை ராணுவம் இன்று பிற்பகல் வாக்கில்தான் பிரபாகரனின் இறந்த உடலை வீடியோ படமாக வெளியிட்டது.
இந் நிலையில் நேற்று கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை அடையாளம் காணும் பணியில் கருணாவை ஈடுபடுத்தியுள்ளது இலங்கை ராணுவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கருணா ஒவ்வொரு உடலையும் அடையாளம் காட்டி, அது யார், என்ன என்ற விவரத்தை ராணுவத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அதன்படி பொட்டு அம்மான், பா.நடேசன், புலித்தேவன் சார்லஸ் அந்தோணி, அவரது உதவியாளர் சுதர்மன், போலீஸ் பிரிவு தலைவர் இளங்கோ, படைப் பிரிவுத் தலைவர்கள் பானு, ஜெயம், படைப் பிரிவு சிறப்புத் தலைவர் ரமேஷ், உளவுப் படை மூத்த தலைவர் தாமஸ், படைப்பிரிவு தலைவர் லட்சுமணன், கடற் பிரிவு முக்கிய தலைவர் ஸ்ரீராம், பெண்கள் படைப் பிரிவின் மூத்த தலைவியான இசையருவி, உளவுப்படை துணைத் தலைவர் கபில் அம்மான், பெண்கள் படை பயிற்சிப் பிரிவு தலைவி அஜந்தி, மார்ட்டர் பிரிவு தலைவர் வரதா, பிரபாரகனின் செயலாளர் புதியவன், படைப்பிரிவின் சிறப்புத் தலைவர் ஜனார்த்தனன் ஆகியோரை கருணா அடையாளம் காட்டியுள்ளார்.
பிரபாகரனின் உடலையும் அவரேதான் அடையாளம் காட்டியிருப்பார் எனத் தெரிகிறது.
இதன் மூலம் விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த 'பெருமை'யைப் பெற்றுள்ளார் கருணா.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications