'அணு ஆயுத' அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: 1,000 கிலோ எடை கொண்ட அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் சக்தி வாய்ந்த அக்னி-2 ஏவுகணையை இன்று இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டது.

ஒரிஸ்ஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள வீலர்ஸ் தீவில் இன்று காலை 10.06 மணிக்கு நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவான டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

தரையில் இருந்து புறப்பட்டு 2000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை சுமார் 20 மீ. உயரம் கொண்டது. சுமார் 16 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை ஆயுதத்தின் எடையை கொஞ்சம் சுமார் 3,000 கிமீ வரை சென்று தாக்கும் வல்லமை வாய்ந்ததாக மாறும்.

இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஏவுகணைகளை நடமாடும் ராணுவ வாகனங்களில் இருந்து கூட ஏவலாம். இலக்கை தாக்குவதற்கு இந்த ஏவுகணை தயார் செய்ய வெறும் 15 நிமிடங்கள் இருந்தால் போதும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+