திருவண்ணாமலையில் ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
திருவண்ணாமலை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி திருவண்ணாமலைக்கு அருகே கொளுத்தப்பட்டது.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டு கொன்றது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் பஸ்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நேற்று இரவு 9.00 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடவில்லை.
இந் நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செல்லகுப்பம் காலனியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியுடன் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சாலை ஒன்றில் அவரது கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி, அமைதியாக கலைந்து போக செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications