பிரபாகரன் மறைந்தது வருத்தம்தான்-கூறுகிறார் கருணா

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணாவை கிழக்கு பிராந்திய தளபதியாக வைத்திருந்தார் பிரபாகரன். ஆனால் பிரபாகரனுடன் முரண்பாடு கொண்டு இயக்கத்தை உடைத்தார் கருணா. பின்னர் தனி அமைப்பை உருவாக்கினார்.
ஆனால் இந்த அமைப்பைச் சேர்ந்த பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் இடையே மோதல் மூண்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அவர் பிள்ளையான் கட்சியை விட்டு விலகி ராஜபக்சே கட்சியில் இணைந்து அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொண்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பலமிழக்க முக்கிய காரணம் கருணாதான். அவர் கூறிய தகவல்களை வைத்துத்தான் கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழித்தது இலங்கை ராணுவம்.
தயா மாஸ்டரும் அடையாளம் காட்டினார்..
இப்போது பிரபாகரனின் உடல் என்று ராணுவம் கூறியுள்ளதையும், கருணாதான் போய் அடையாளம் காட்டியுள்ளார். இதற்காக ஹெலிகாப்டரில் அவரை போர் முனைக்குக் கூட்டிப் போயுள்ளனர். அவருடன் சமீபத்தில் பிடிபட்ட தயா மாஸ்டரையும் அழைத்துச் சென்றுள்ளது ராணுவம்.
இருவரும் சேர்ந்து தங்களது முன்னாள் தலைவரை அடையாளம் காட்டினராம்.
பிரபாகரன் குறித்து கருணா கூறுகையில், இது பிரபாகரன்தான். எந்த சந்தேகமும் இல்லை. அவரது உடலி்ல் எந்த மாற்றமும் இல்லை.
இந்த முடிவை அவரே தேடிக் கொண்டார். அவர் உயிருடன் இல்லை என்பது எனக்கு வருத்தம்தான். ஆனால் யாருடைய பேச்சையும் அவர் கேட்டதில்லை. இனப்பிரச்சினைக்கு ஆயுதப் போராட்டம் மூலம்தான் தீர்வு காண முடியும் என அவர் நம்பினார். பேச்சுவார்த்தை நடத்த பலமுறை அழைக்கப்பட்டபோதும் அவர் போகவில்லை. ஜனநாயக பாதைக்குத் திரும்ப கிடைத்த வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொள்ள மறுத்து விட்டார் என்று கூறியுள்ளார் கருணா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications