மதுரை அருகே பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு-பயணிகள் காயம்
மதுரை: மதுரை அருகே அரசுப் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் பஸ்சில் இருந்த 3 பயணிகள் படுகாயமடைந்தனர்.
பிரபாகரன் குறித்த தகவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
நேற்று சென்னையில் அரசுப் பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இன்று மதுரை அருகே திருப்புவனத்தில் அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் பயணிகள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென பஸ் மீது மர்ம' நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினார்கள்.
இதில் பஸ்சின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. அதிர்ஷ்டுவசமாக பஸ் தீப்பிடித்துக் கொள்ளாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும், ராமநாதபுரம் பனக்குடியை சேர்ந்த சின்னையா (25), பனையூர் சாரதி, இலங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 பேரும் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் திருப்புவனத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications