மே 24ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

Ramdoss
தைலாபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோற்று கேவலப்பட்டுள்ள பாமக, தனது தோல்விக்கான காரணங்களை ஆராய, வரும் மே 24ம் தேதி செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், மே 24ம் தேதி காலை 11 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்ரடர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். எனது தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.

இக் கூட்டத்தில், கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி, எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அணித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக் கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும், எதிர்கால திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனை செய்யப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+