ஸ்ரீபெரும்புதூர்-ராஜீவ் நினைவிடத்தில் கூடுதல் பாதுகாப்பு
ஸ்ரீபெரும்புதூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 18வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படையின் கூடுதல் பிரிவுகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராஜிவ் நினைவிடத்தி்ற்கு அவரது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும் சோனியாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ வருவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேசமயம், காங்கிரஸ் தலைவர்கள், நினைவிடத்திற்கு நாளை வரவுள்ளனர்.
இதையடுத்து ராஜீவ் காந்தி நினைவிடம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
தங்கபாலு...
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கூறுகையில்,
உலக அரசியல் அரங்கில் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாய் அன்றைக்கு இளமைத் துடிப்போடும், சர்வதேச தலைவர்களின் ஒருமித்த வாழ்த்துக்களோடும், வரவேற்போடும் உலா வந்த தலைவர் ராஜீவ் காந்தி இம்மண்ணில் பலியாகி உலகின் உன்னத தியாக வரலாறாக நிலைபெற்ற நாள் மே 21.
அவரது 18வது நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்ட, நகர, வட்டார, கிராம காங்கிரஸ் கிளை நிர்வாகிகளும், தோழர்களும் அவரவர் பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படங்களை மலர்களால் அலங்கரித்து வைக்கவும், அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தவும் வேண்டுகிறேன்.
மேலும் புனிததலங்களில் வழிபாடுகள் நடத்திடவும், அன்னதானம் வழங்கவும், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்திடவும் அந்தந்த பகுதியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய விஞ்ஞான இந்தியாவிற்கு அன்றைக்கே அடித்தளமிட்டு வெற்றிகண்ட வரலாற்று நாயகன் ராஜீவ் காந்தி.
அவரது வழித்தோன்றல் இந்தியாவின் கோடான கோடி இளைஞர்களின் நிகரற்ற தலைவர் ராகுல்காந்தியின் மக்கள் நலப்பணிக்கு ஒளி விளக்காய் அமைந்த தலைவர். அவரது தியாகத்தையும், சாதனைகளையும் மக்களின் இதயங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை காங்கிரஸ் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் உரித்தானது என்றார் தங்கபாலு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications