அமெரிக்காவில் மேலும் 1000 பணியாளர்களை அமர்த்தும் இன்போஸிஸ்
சியாட்டில்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போஸிஸ் 1000 பணியாளர்களை தனது அமெரிக்க கிளை விரிவாக்கத்துக்காக பணியமர்த்துகிறது.
இத்தகவலை சியாட்டிலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இன்போஸிஸ் தலைமை நிர்வாக அலுவலர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் இந்தப் பணியாளர்களை நியமித்துவிடுவோம் என்று அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் நிறுவனத்தின் மொத்தப் பணியாளர் எண்ணிக்கை 104000ஆக உயர்ந்துள்ளது என்றும் இவர்களில் 14000 பேர் அமெரிக்க கிளைகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிகப் பணியாளர் சேர்க்கை தங்களுக்கு சுமையில்லை என்றும், திறமையாளர்கள் நிறைய இருந்தால் சிறப்பாக பணிகளைச் செய்ய முடியும் என்பது இன்போஸிஸ் தத்துவம் என்றும் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்தியப் பொருளாதார மீட்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் மிக மிக சீக்கிரமாகவே மீட்சிக்கான அறிகுறி தெரிவதாகவும், அதற்குக் காரணம், அமெரிக்காவை விட சிறப்பான பொருளாதாரக் கட்டமைப்பு இந்தியாவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications