மாருதிக்கு கைகொடுக்குமா புதிய ரிட்ஸ்?

Subscribe to Oneindia Tamil

Ritz
சென்னை: மாருதி நிறுவனம் சமீபத்தில் தனது ரிட்ஸ் வகை கார்களை வெளியிட்டது. வெளிநாடுகளி்ல் ஸ்பிளாஷ் என்ற பெயரில் விற்பனையாகி வரும் இந்த கார் இந்தியாவில் ரிட்ஸ் என்ற பெயரில் வந்துள்ளது. இந்தியாவில் ஸ்பிளாஷ் என்ற பெயரை ஏற்கனவே மற்றொரு நிறுவனம் வாங்கி விட்டதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த காரின் வடிவமைப்பு பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. குட்டி கார் என்றால் அது மாருதி தான் என அதன் வாடிக்கையாளர்களும் 'உச்' கொட்டுகிறார்கள். பொருளாதாரம் எப்படி இருந்தாலும் சரி, சந்தை எப்படி இருந்தாலும் சரி குட்டி கார்கள் வரிசையில் மாருதியின் புதிய ரகம் ஒன்று இடம்பிடிப்பது நிச்சயம் என்கிறார் ஆட்டோமொபைல் நிபுணர் ஒருவர்.

இது குறித்து மாருதி உத்யோக் நிறுவனத்தின் தலைவர் நாகநிசி கூறுகையில், இந்தியா சிறு கார்களின் முக்கியமான சந்தை. இதனால் ரிட்ஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சிறிய காரோ அல்லது பெரிசோ எந்த சந்தையாக இருந்தாலும் அதில் மாருதி கார் ஒன்று இருக்கும் என்றார்.

தனது பழைய மாடல்களான மாருதி வேகன் மற்றும் மாருதி ஸ்விப்ட் ஆகியவற்றுக்கு பதிலாக இந்த மாருதி, ரிட்ஸ் கார் களமிறங்குகிறது. வேகன் ஆர் மாடல்களை விட இந்த கார் பல தலைமுறை நவீனமானது, சொகுசானது. சுமார் 3.71 மீ., நீளம் கொண்ட இந்த காரின் அகலம் 1.68 மீ., ஆகும்.

இந்த கார் தற்போது 20, 30 வயதுகளில் இருக்கும் இளம் தலைமுறையினரை குறிவைத்து விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காருக்கு அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இந்த கார் ஓட்டுவதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும் வகையிலும், காருக்குள் இருந்து பார்க்கும் சாலைகள் ஓட்டுனருக்கும் முழுமையாகவும், தெளிவாகவும் தெரியும் வகையிலும் வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. காரின் உயரம் 1.62 மீ., ஆக உள்ள போதும் அதிலிருக்கும் சஸ்பென்ஸ் அமைப்பு வண்டியை அதிர்விலிருந்து காக்கிறது.

இந்த காருடன் 14 இன்ச் அகல டயர் பொருத்தப்படுவதால், எந்த கரடுமுரடான சாலைக்கும் கட்டுறுதியான காராக இருக்கிறது. மேலும் இதில் பொருத்தப்பட்டு இருக்கும் கேபி12 என்ஜின் காருக்கு வேகத்தையும், ஓட்டுனருக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

மேலும் இந்த காரின் மைலேஜ் 17 லிட்டர் என்ற அளவில் அதிகமாக இருப்பதால் தற்போது இந்திய சாலைகளில் ஓடும் கார்களில் அதிக எரிபொருள் பயன்பாடு திறன் கொண்டதாகவும் இந்த கார் இருக்கிறது.

மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் மற்றும் ஜென் போன்ற கார்களில் பயணம் செய்துவிட்டு இதில் செல்பவர்களுக்கு தாங்கள் இத்தனை காலம் எவ்வளவு பின்தங்கிய காலத்தில் உள்ள காரில் சென்றுள்ளோம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அத்தனை சிறப்பம்சங்களையும் ஒருங்கே பெற்றுள்ள இந்த கார் தங்களுக்கு கைகொடுத்து, தங்கள் விற்பனையை உயர்த்தும் என மாருதி நம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+