நவீன்-ராஜசேகர ரெட்டி முதல்வர்களாக பதவியேற்பு
புவனேஸ்வர்: ஒரிசா முதல்வராக நவீன் பட்நாயக் 3வது முறையாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று ஆந்திர முதல்வராக 2வது முறையாக ராஜசேகர ரெட்டி பதவியேற்றார்.
ஒரிசா சட்டசபைத் தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் 103 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் நவீன் பட்நாயக். இன்று புவனேஸ்வரில் நடந்த விழாவில் 3வது முறையாக முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. ஆளுநர் பன்டாரே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜசேகர ரெட்டி முதல்வராகப் பதவியேற்பு..
இதேபோல நேற்று ஆந்திர முதல்வராக 2வது முறையாக ராஜசேகர ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் என்.டி.திவாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆந்திராவின் 14 வது முதல்வராக பதவியேற்றுள்ளார் ரெட்டி. மேலும், முதல் பதவிக்காலத்தை நீண்ட காலம் வகித்த முதல் ஆந்திர முதல்வர் என்ற பெயரும் ரெட்டிக்குக் கிடைத்துள்ளது. இவர் தனது முதல் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகள் ஐந்து நாட்கள் வகித்தார்.
2வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ள ராஜசேகர ரெட்டிக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து அனுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications