ராமேஸ்வரம் கோயில் தீர்த்த கட்டணம் திடீர் உயர்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தக்கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள புனித ஸ்தலங்களில் கருதப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் தரிசனம் செய்ய தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடற்கரையில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலுக்குள் அமைந்துள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கோயிலுக்குள் உள்ள மகாலெட்சுமி தீர்த்தம் முதல் கோடி தீர்த்தம் வரையிலான 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு ஒருவருக்கு கட்டணமாக இதுவரை ரூ. 7ம் தீர்த்தத்தை இறைத்து ஊற்றும் பணியாளர்களுக்கு சேவைக்கட்டணமாக ரூ.10ம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தீர்த்தக் கட்டணத்தை தற்போது வாங்கும் தொகையில் 50 சதவீதம் கூடுதலாக கோயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
இதனால், கோயிலில் தீர்த்தக்கட்டணமாக நேற்று முதல் ரூ. 13ம், இறைத்து ஊற்றுபவர்களுக்கு சேவைக் கட்டணமாக ரூ. 12ம் சேர்த்து ஒருவருக்கு ரூ. 25 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
கோயில் நிர்வாகத்தின் இந்த செயல் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் கோயில்கள் மனிதனை மகத்துவப்படுத்துவைகள். எனவே வியாபார நோக்கத்தோடு நிர்வாகம் செய்படுதவதை தவிர்த்து சேவை அடிப்படையில் பக்தர்களுக்கு அவைகள் இலவசமாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications