பாரமெளண்ட் விமானங்களில் செல் போனில் பேசலாம்!
டெல்லி: சென்னை மற்றும் டெல்லி இடையே புதிய விமான சேவையை துவக்கியுள்ள பாரமெளண்ட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானங்களில் செல்போனில் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்லது.
தென் இந்தியாவில் தனது விமான சேவையை நடத்தி வரும் இந்த நிறுவனம் வட இந்தியாவிலும் விரிவாக்கத்தைத் துவங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னை-டெல்லி இடையே தினசரி விமான சேவையை துவக்கியுள்ளது. இந்த விமானம் சென்னையிலிருந்து தினமும் மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு டெல்லி சென்றடையும். அங்கிருந்து இரவு 7.40 மணிக்கு கிளம்பி, 9.55 மணிக்கு சென்னை வருகிறது.
சுமார் 75 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய எம்பரர் 170 ஜெட் ரக விமானத்தை இந்த சேவைக்காக பயன்படுத்தி வருகிறது.
மேலும், இந்த நிறுவனம் டெல்லியில் இருந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, விசாகப்பட்டிணம், பெங்களூர், ஐதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை ஆரம்பிக்க இருக்கிறது.
இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் கூறுகையில்,
டெல்லியில் இருந்து பெரும்பாலான தென் இந்திய நகரங்களுக்கு விமான சேவையை துவக்க திட்டமிட்டுள்ளோம். 2010ம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுமையையும் எங்களால் சேவையால் இணைக்க திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து ஜெய்பூர், லக்னெள், சண்டிகர் ஆகிய நகரங்களுக்கும் சேவையை துவக்கும் எண்ணம் உள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக எங்களது விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது மொபைல் போன்களை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications