2வது முறை பிரதமராக பதவியேற்றார் மன்மோகன்-19 அமைச்சர்களும் பதவியேற்பு

அவருடன் பிரணாப் முகர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம் நபி ஆசாத்,
சுஷில் குமார் ஷிண்டே, வீரப்ப மொய்லி, ஜெய்ப்பால் ரெட்டி, கமல் நாத், வயலார் ரவி, மீரா குமார், முரளி தியோரா, கபில் சிபல், அம்பிகா சோனி, பி.கே.ஹண்டிக், ஆனந்த் ஷர்மா, சி.பி.ஜோஷி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த வண்ணமயமாக நிகழ்ச்சியில் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முன்னதாக அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்ததால் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த பதவியேற்பு விழா ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது.
பிரதமராக பதவியேற்றவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி ஆகியோரிடம் சென்று வணக்கம் தெரிவித்தார் மன்மோகன் சிங்.
முன்னதாக பிரதமருடன் இன்றே 63 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுகவுடனான சிக்கல் காரணமாக முழு அளவிலான அமைச்சரவை இன்று பதவியேற்கவில்லை. வரும் 26ம் தேதி மற்ற அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
ஆனால், இட ஒதுக்கீட்டு விஷயத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்ட அர்ஜூன் சிங்குக்கு இம்முறை அமைச்சர் பதவி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications