வட மாகாணத்தில் தேர்தல்-இலங்கை முடிவு
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடித்து விட்டதாக அறிவித்துள்ள இலங்கை அரசு அதே சூட்டோடு வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஜெயசிங்கே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது நாடு இப்போது தீவிரவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டது. விரைவில் வட பிராந்தியத்தில் மாகாணக் கவுன்சில் தேர்தலை நடத்துவோம் என்றார்.
கொழும்பு சென்றிருந்த இந்தியத் தூதர்கள் மேனன், நாராயணனிடம் தமிழர்களுடன் அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள இலங்கை அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நீண்ட காலமாக இந்தியா வலியுறுத்தி வரும் வடக்கு மாகாண தேர்தலை நடத்தவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
விடுதலைப் புலிகளிடமிருந்து முன்பே மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உடனடியாக தேர்தலை நடத்தியது இலங்கை அரசு. அங்கு தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்சியை நிறுவியவர் கருணா. ஆனால் அவருக்கும், பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கருணா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை விட்டு விலகி ராஜபக்சே கட்சியில் போய் இணைந்து எம்.பியாகி இப்போது அமைச்சராகவும் உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications